Wednesday, July 9, 2008

அறிமுகக் குறிப்பு

தாஹா ஜாபிர் அலவானி கெய்ரோவிலுள்ள அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத் தில் கலாநிதிப் பட்டம் பெற்றுக் கொண்டவர். இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனத்தின் ஸ்தாபக உறுப்பினர்; முன்னாள் தலைவர். சமூக விஞ்ஞானங்கள் மற்றும் இஸ்லாமிய பாடசாலைக்கான மையம், வட அமெரிக்காவின் பிக்ஹு சபை என்பவற்றின் தலைவர். இவர் அறபு மொழியில் எழுதிய ‘அதபுல் இஹ்திலாப்பில் இஸ்லாம்’ என்ற நூலின் ஆங்கிலப் பதிப்பின் தமிழ் வடிவமே இந்நூலாகும். இதுதவிர்ந்த இன்னும் சில நூற்களும் தமிழில் வெளிவந்துள்ளன.
வெளியீட்டாளர் குறிப்பிலிருந்து...இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் இந்த நூலின் மூல அறபு வாசகத்தை தயார் செய்து வந்த கலாநிதி தாஹா ஜாபிர் அலவானி கவனத்தில் கொண்டிருந்தது. முழு முஸ்லிம் சமூகத்தையுமல்ல. முஸ்லிம் உலகில் சிறியதோர் அங்கமான ஒரு நாடு மட்டுமே அன்னவர் விளிக்க விரும்பியது. அங்கு இஸ்லாமிய இயக்கங்கள் சில திறம்பட இயங்கி வந்தன. அவை அரசியல் அரங்கில் ஈடுபட்டு ஆட்சிபீடம் ஏறிவிடக் கூடுமாயின் தாம் அன்றாடம் எதிர்நோக்க வேண்டியுள்ள பிரச்சினைகள் அனைத்துக்கும் தக்க தீர்வுகள் கண்டுக் கொள்ளலாம் என நேர்மை உள்ளம் கொண்ட சாதாரண முஸ்லிம் மக்கள் எதிர்பார்ப்புகள் வைத்திருந்தார்கள்.
என்றாலும், காலப்போக்கில் நிகழ்ந்ததென்ன? மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்த அந்த இஸ்லாமிய இயக்கங்கள், இராஜாங்கத்தாரின் அழுத்தங் களின் விளைவாக பல்வேறு குழுக்களாகப் பிளவுபட்டுச் சொல்லலாயின. மட்டுமல்ல, அவை ஒன்றையொன்று எதிர்த்துச் செல்லப் பிளவுகள் பெருகி பலதரப்பட்ட இஸ்லாமிய கட்சிகள், சங்கங்கள், இயக்கங்கள், கூட்டுகள் எனச் சிதைவுறலாயின. ஒவ்வொரு குழுவாரும் தத்தமது கருத்தை ஏற்கக் கூடிய மக்களின் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்வதில் மட்டுமே கவனஞ் செலுத்தி வரலானார்கள். இந்தப் பின்னணியிலே கலாநிதி தாஹா ஜாபிர் அலவானி இந்நூலை எழுதியுள்ளார்.
என்குறிப்பு
முஸ்லிம் சமூகத்திற்குள்ளால் பல பிரிவுகள் காணப்படுகின்றன. அவர்களுக் குள்ளால் காணப்படுகின்ற முரண்பாடுகளின் விளைவாக பரவலாக மோதிக் கொள்கின்றார்கள். உயிரிழப்புக்களை, சொத்திழப்புக்களை ஏற்படுத்திக் கொள்கி ன்றார்கள் என்ற செய்திகளை இன்றைய நாட்களில் அதிகமாக செவிமடு க்கின்றோம். அவை முற்றுமுழுதாக உண்மையல்லாத போதும் அவற்றில் காணப்படும் யதார்த்தங்களை புறந்தள்ளி நாம் பிளவுப்படாத சமூகம் என்று கூற முடியாதுள்ளது.முரண்பாடுகள் தோன்றுவது இயல்பானது. அந்த இயல் பிலே மனிதன் படைக்கப்பட்டுள்ளான். ரஸூல் (ஸல்) அவர்களின் காலத்திலும் ஸஹாபாக்களிடையே ஏற்பட்ட முரண்பாடுகளை வரலாற்றிலே நாம் காண்கின்றோம். ஆனால் அந்த முரண்பாடுகள் அவர்களது உறவை, சகோதரத்துவத்தைப் பாதிக்கவில்லை. மாற்றமாக இன்னும் நெருக்கமான வர்களாக அவர்கள் மாறினார்கள்.அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) ஆகியோரு க்கிடையே நிறைய விடயங்களில் கருத்து முரண்பாடுகள் காணப்பட்டன. ரஸூல் (ஸல்) அவர்களின் முன்னிலையிலே அவர்கள் சத்தமிட்டு, முரண் பட்டுக் கொண்டபோது அல்குர்ஆன் வசனமும் இறங்கியது. ஆனால் அபூபக்கர் (ரழி) அவர்கள் தனது மரணத் தருவாயில் அடுத்த கலீபாவாக உமர் (ரழி) அவர்களையே தெரிவு செய்துவிட்டுச் சென்றார்கள்.இந்நிலை ஸஹாபா க்களின் இறுதிக் காலப்பிரிவில் மாற்றம் பெறலாயிற்று. சட்டப்பிரச்சினை களில் காணப்பட்ட முரண்பாடுகளோடு அரசியல் முரண்பாடு களும் தீவிர மடைந்தன. குறிப்பாக அலி (ரழி), முஆவியா (ரழி) ஆகியோருக்கிடையிலான முரண்பாடு முஸ்லிம் சமூகத்தை பல கூறுகளாக பிளவடையச் செய் தது.அதன் பின்னரான காலப்பகுதிகளில் மத்ஹப்களை பின்பற்றும் நிலை வளர்ந்து, அரசியல் வேறாகவும், மார்க்கம் வேறாகவும் கருதப்பட்டது. இம்முரண்பாடுகளை கவனமாக கையாண்ட வெளிச்சக்திகள் கிலாபத்தை வீழ்ச்சியடையச் செய்தன.இன்று அநேகமான முஸ்லிம்களிடத்திலே இஸ்லா த்தின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையீனம் காணப்படுகின்றது.
சிலர் இஸ்லாத்திலே முரண்பாடுகளே தோன்றக்கூடாது என்று எதிர்பார்க் கின்றனர். பலர் இது குறித்து எவ்வித கவனமு மின்றி வாழ்ந்துக் கொண்டிருக் கிறார்கள்.இந்நூல் முரண்பாடுகள் இயல்பானது என்பதையும், அதன் போது பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்களையும் உதாரணங்களோடு சொல்லிச் செல்கின்றது. அவசியம் வாசித்து விளங்கிக் கொள்ள வேண்டிய நூலாகும்.

பெண்களைத் தண்டித்தல்...

அறிமுகக் குறிப்பு
குடும்பவாழ்வில் கணவன் மனைவிக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகள், பிரச் சினைகளை கையாள்வது எவ்வாறு என்பது தொடர்பில் அல்குர்ஆனும், அஸ் ஸுன்னாவும் பொருத்தமான, சரியான வழிகாட்டல்களை வழங்கியுள்ளன. எனினும் கூட அவற்றைப் புரிந்து கொள்வதில், விளங்கப்படுத்துவதில் பல வேறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன.
இந்நூல் இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனத்தினால் 2003 ஆம் ஆண்டு அறபு மொழியில் வெளியிடப்பட்டதாகும். இதன் ஆங்கிலப் பதிப்பான Marital Discard Recapturing the full islamic sprit of the Human Diginityஎன்ற பிரதியின் தமிழாக்கமே இதுவாகும்.இந்நூல் ஆசிரியர் கலாநிதி அப்துல் ஹமீத் அபூஸுலைமான் அமெரிக்காவில் தலைமையகத்தை கொண்டு செயற்படும் இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனத்தினதும், சிறுவர் அபிவிருத்தி நிறுவனத்தினதும் தலைவர்; மலேசிய இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர்.
வெளியீட்டாளர் குறிப்பிலிருந்து...
குடும்ப வாழ்வு பிரச்சினையே இல்லாததொன்றல்ல. சுமூகமான நிலைமையே எப்போதும் நீடிக்கும் என்பதும் இல்லை. பிணக்குகள் ஏற்பட்டு இக்கட்டான சூழ்நிலைக்கு கணவன்மனைவியர் தள்ளப்பட்டுவிட்டால் என்ன செய்வது? அத்தகு நிலைமைகளில் சம்பந்தப்பட்டவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்தும் குர்ஆன் அறிவுறுத்தல்கள் தருகின்றது.இவற்றின் தொடரில் அடக்கமில்லா மனைவியை பொறுத்து கைக்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்த வசனம் (4:34) மேலைத்தேச நாடுகளிலும் சில முஸ்லிம் வட்டாரங்களிலும்கூட பெண்களை அடித்து துயருறுத்த ஆண்க ளுக்கு அழிக்கப்பட்டுள்ள அனுமதியே என கொள்ளப்பட்டு பெரும் கண்ட னங்களை எழுப்பி வைத்துள்ளது. பிரச்சினையை சரியான முறையில் அணுகி, ஆராய்ந்து, தக்க தீர்வினை, இறைவாசகங்களினதும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஸுன்னாவினதும் அடிப்படையில் கண்டு கொள்வதே கலாநிதி அபூ ஸுலைமான் கையாளும் முறைமை.
எடுத்துக் கொண்டுள்ள பொருளை பெண்ணுணர்வுகள் மீதான ஆழ்ந்த அனுதாபத்துடன் அணுகியிருப்பது இதம் தருகின்றது. இத்தகு அணுகுமுறை சாதாரணமாக பெண்கள் பற்றிய ஆண்களது ஆக்கங்களில் காணப்படுவது அரிது.
என் குறிப்பு
குடும்பவாழ்வை பாதிக்கும் காரணிகளை அல்குர்ஆன் அடையாளப்படுத்தியுள்ளதோடு,அவற்றை தீர்ப்பதற்கான அழகிய வழிமுறை களையும் சொல்லித் தந்துள்ளது. ரஸுல் (ஸல்) அவர்களது குடும்பவாழ்வு அதற்கான சிறந்த முன் மாதிரியாக அமைந்தது என்பதை இந்நூல் விளக்கிச் சொல்கின்றது. முஸ்லிம் பெண்கள் அடக்கப்படுகின்றார்கள்; ஒடுக்கப்படுகின் றார்கள். என்ற குற்றச்சாட்டுக்கள் பரவலாக முன்னெடுக்கப்படுகின்ற சூழலில் அல்குர்ஆனின் வசனங்களும் அதற்கு துணையாக,பிழையாக விளக்கப்படு வதும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
“இன்னும் எந்தப் பெண்களின் மாறுபாட்டை நீங்கள் அஞ்சுகின்றீர்களோ, அவர்களுக்கு நீங்கள் உபதேசம் செய்யுங்கள் (அதில் திருந்தாவிடின்) படுக்கையிலிருந்து ஒதுக்கி வையுங்கள் (அப்போதும் திருந்தாவிடின்) அவர்களை காயம் படாமல் இலேசாக அடியுங்கள். (பின்னர்) அவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டால் அவர்களின் மீது குற்றஞ்சாட்ட வேறு வழிகளை தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், சக்தி படைத்தவனாகவும் இருக்கின்றான். (4:34)இவ்வசனத்தில் உபதேசித்தல், படுக்கையிலிருந்து ஒதுக்கி வைத்தல் என்பவற்றைத் தொடர்ந்து சொல்லப் படுகின்ற ‘இலேசாக அடித்தல்’ என்ற சொற்பிரயோகம் தனித்து இந்நூலில் ஆராயப்படுகின்றது.
இச்சொற்பிரயோகத்திற்கு இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் விளக்கம் கோரப்பட்டபோது பல்துலக்கும் குச்சி, அல்லது சிறிய தடியால் அடித்தல் என்று விளக்கம் கூறியுள்ளார். ஆனால் முதலிரு வழிமுறைகளை விடவும் தாக்கம் கூடியதாய் இது அமையவில்லை. எனவே இதன் கருத்து என்ன? என்று ஆராய்ந்து சொல்கின்றார் கலாநிதி அபூஸுலைமான்.

நூல் அறிமுகங்கள்


தெரிதா


அ) ழாக் தெரிதா 17.07.1930 அல்ஜீரியாவில் பிறந்தார். அக்காலப் பிரிவில் அல்ஜீரியாவில் கடுமையான யூத எதிர்ப்பு காணப்பட்டது. அதனால் அங்குள்ள பாடசாலைகளில் 7% மாத்திரமே யூதர்களுக்கு வழங்கப்பட்டது. ஆகையால் தெரிதாவிற்கு 11 வயது ஆகும் வரை பாடசாலைக்குச் செல்லக் கிடைக்கவில்லை. 11ஆவது வயதில் பாடசாலையில் இணைந்தபோதும் 7% பூர்த்தியாகக் காணப்பட்டதால் உடனடியாக விலக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து வேறொரு பாடசாலையில் இணைந்து கற்றார்.


தனது 19ஆவது வயதில் பிரான்ஸிலுள்ள எகோல் நாமேல் சுப்பீரியர் கல்லூரியில் இணைந்து கொண்டார். 1956ம் ஆண்டு அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் நகரிலுள்ள ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார். பின்னர் மீண்டும் அல்ஜீரியாவுக்கு வந்து சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து 1960ம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள ஜான் ஹாப்கில்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையின் மூலம் புகழ் பெற்றார்.


தெரிதா தனது மகன்களுடனும் மனைவியுடனும் பாரிஸில் இருந்தபோது மரணித்தார்.


ஆ) நீட்சே, ஹைடெக்கர், சசூர் ஆகியோரின் சிந்தனைகளால் அதிகம் பாதிக்கப்பட்டார். தெரிதா வின் முக்கியமான சிந்தனையாக கட்டவிழ்ப்பு காணப்பட்டது. இன்று இது ஒழுங்கவிழ்ப்பு, தகர்ப்பமைப்பு போன்ற சொற்களினூடாகவும் பேசப்படுகின்றது. தெரிதாவின் கட்டவிழ்ப்பு கோட்பாட்டின் மீது கடுமையான, நியாயமான விமர்சனங்கள் இருக்கின் றன. இ) தெரிதா பற்றி தெரிந்துகொள்வதற்கும் அவரின் சிந்தனைகள், ஆக்கங்களைப் புரிந்து கொள்வதற்கும் இந்நூலை வாசிக்கலாம்.
மீள்பார்வை 153



பார்த்




அ) பார்த் 1915ம் ஆண்டு பிரான்ஸின் சர்போ எனும் ஊரில் பிறந்தார். அவர் பிறந்த அடுத்த வருடமே அவரது தந்தையார் இறந்துவிட்டார். அதனால் மிகவும் சிரமத்துடனே அவரது வாழ்க்கை ஆரம்பமாகியது. 1924ம் ஆண்டு பாரிஸுக்குச் சென்ற பார்த் அங்கு லைசிமாண்டே, லைசி லூயி, டி கிராண்ட் ஆகிய பாடசாலைகளில் கற்றார். இலக்கியம், கிரேக்க தத்துவவியல், இலக்கணங்கள், மொழியியல் போன்ற துறைகளில் பார்த் ஆர்வம் செலுத்தினார்.




1934ம் ஆண்டு இவர் காசநோயால் பாதிக்கப்பட்டார். மீண்டும் அவர் லைசீஸ் பாடசாலையில் ஆசிரியராக இருந்தபோது காசநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். ஐந்து வருடங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அந்தக் காலப்பிரிவில் அதிகமான புத்தகங்களை வாசிக்கத் தவறவில்லை.




ஆ) 1964ம் ஆண்டு அவரது கட்டுரைகள் நூலுரு பெற்றன. அவற்றிற்கு எதிராக சோர்போன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ரேமாண்ட் என்பவர் கடுமையாக விமர்சித்து கட்டுரை ஒன்றை எழுதினார். இதையடுத்து பார்த்தின் புகழ் உலகெங்கும் பரவியது. அக்கட்டுரைக்கு எதிராக விமர்சனமும் உண்மையும் என்ற இன்னொரு கட்டுரையை பார்த் எழுதினார்.




இ) பார்த்தைப் பற்றி பார்த், கண்ணீரின்றி, பிரசித்தம் இன்பமாகும் ஆகிய நூல்களையும் பார்த் எழுதினார். 1980ம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஒரு பிற்பகலில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்த கட்டிடத்துக்கு எதிரே இருந்த உணவகத்தில் உணவருந்தி விட்டு பாதையைக் கடக்கும்போது வாகனத்தால் மோதுண்டு தூக்கியெறிப் ட்டார். நான்கு வாரங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற இவர் திடீரென்று மரணித்தார்.

நூல் அறிமுகம்


தெலூஸ் கத்தாரி


அ) மிக அபூர்வமாக இருவர் இணைந்து பணியாற்றுவது சாத்தியமாகின்றது. கிலே தெலூஸ் 1925ஆம் ஆண்டு பாரிஸில் பிறந்தார். சோர்போனில் உயர் கல்வியைக் கற்றார். ழான் பால் சார்த்தாரினதும், ஃபூக்கோவினதும் சிந்தனைகளால் தாக்கமடைந்தார். 1957 வரை ஆசிரியராகப் சேவையாற்றினார். அதன் பின்னர் சோர் போன் பல்கலைக்கழகத்திலும் சென்டர் நெஷனல் டீ ரிசேர்ச் சயன்டிபிக் நிறுவனத்திலும், பாரிஸ் பல்கலைக் கழகத்திலும் பணியாற்றினார்.


இவர் அதிகமாக புகைப்பிடிப்பவராகக் காணப்பட்டார். அதனால் சிறிது காலத்திலே புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அது சுவாசக் குழாய் முழுவதும் பரவியதால் பேசும் ஆற்றலை இழந்தார். 1995ல் அடுக்கு மாடி குடியிருப்பிலிருந்து ஜன்னல் வழியே பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.


இவரின் சகாவான பியரி ஃபெலிக்ஸ் சர்தாரி ஏப்ரல் 30, 1930ம் ஆண்டு பிரான்ஸில் பிறந்தார். 1950களில் லாக் லகானிடம் பயிற்சிக்குச் சேர்ந்தார். 1955 முதல் 1965 வரை கம்யூனிஸ குழுவொன்றுடன் இணைந்து செயற் பட்டவர் 1992ல் மரணித்தார்.


ஆ) தெலூஸ் கத்தாரி சந்தித்துக் கொண்டது 1968ம் ஆண்டாகும். இருவரும் சந்தித்து சிறிது நேரத்திலே நண்பர்களானார்கள். இவர்கள் இணைந்து முதலாவதாக எழுதிய நூல் ஈடிபசுக்கு எதிராக; முதலாளித்துவமும், மனப் பிறழ்வும் என்ற நூலாகும். இ)இருவரினதும் முக்கியமான கோட்பாடு ரை சோம் எனப்படுவதாகும். இதனை மொழிபெயர்த்தால் கிழங்கு போன்ற என்ற கருத்தைத் தரும். எனினும் இதை விடவும் விரிந்த கருத்திலே ரைசோமை இருவரும் பயன்படுத்தினர்.
நன்றி: மீள்பார்வை-153

Sunday, June 29, 2008

நஜீ அல் அலியை நினைத்து…




நஜீ அல் அலி ஒரு பிரபல்யமான கார்டூன் ஓவி யர்.1987.07.22 ஆம் திகதி புதன்கிழமை இவர் லண்டன், செல்சியிலிருந்து அல் கப்பாஸ் பத்திரிகை அலுவலக த்திற்கு சென்று கொண்டிருந்த போது துப்பாக்கி மனித னால் தலையில் சுடப்பட்டார். ஸ்டீபன் மற்றும் ஸெயாரிங் வைத்தியசாலைகளில் 5 வாரங்களாக கோமா நிலையிலி ருந்தார். அந்த 5 வாரங்களும் அவரை இயந்திரங்களே இயங்கச் செய்திருந்தன. ஆகஸ்ட் 30ஆம் திகதி 1987 இல் நள்ளிரவு கடந்து ஒரு மணித்தியாலயத்தில் தனது 51 ஆவது வயதில் மரணித்தார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.



1988 ஆம் ஆண்டு சர்வதேச பத்திரிகை வெளியீட்டார்களின் சங்கம் வருடாந்த தங்கப்பேனை விருதை வழங்கி அவரை வைத்தது.



நஜீ அல் அலிக்கு கார்டூன் வரையத் தொடங்கியதிலிருந்தே கொலை அச்சுறுத்தல்கள் காணப்பட்டன. அதனால் பல நாடுகளுக்கு இடப்பெயரவும் நிர்பந்திக்கப்பட்டார். லெப னான்,குவைத்,பிரித்தானியா என்பவை குறிப்பிடத்தக்கவை.
அவருக்கு 11வயதாக இருந்தபோது 1948 ஆம் ஆண்டு பலஸ்தீனை இஸ்ரேல் என்ற ய10த சக்தி ஆக்கிரமித்தது. எனவே நிறைய பலஸ்தீனர்களைப்போல நஜீயின் குடும்பமும் தென்லெபனானிலுள்ள சிடன் பிரதேச த்திலுள்ள அகதி முகாமில் தஞ்சமடைந்தது. முகாமி லிருந்த காலப்பிரிவிலே ஐ.நா வின் அகதிகள் நலன் பேணும் மையத்தின் ஆசிரியர்களால் இவரது திறமை அறியப்பட்டது. அவர்கள் கார்டூன் வரையும் துறை யில் நஜீயை ஊக்குவித்தனர்.



பின்னர் நஜீ சித்திரப்பாட ஆசிரியராக குவைத்திற்கு சென் றார். அங்கிருந்தபோது அல்கப்பாஸ் பத்திரிகை அலுவலக த்தில் கார்டூன்களை வரைந்தார். அவரது கார்டூன்கள் பல ரதும் கவனத்தைப் பெற்றன. இந்ந நிலையிலே அவர் அரசியல் காரணங்களுக்காக குவைத்திலிருந்து வெளியே ற்றப்பட்டார்.



நஜீயின் தாயின் நிலை துயர் நிறைந்தது. அவள் பலஸ்தீனி லுள்ள தனது வீட்டுச்சாவியை அவளது காலத்திலே தொங்கப்போட்டிருந்தாள்.என்றாவது ஒரு நாள் தனது நாட்டிற்கு ,தனது வீட்டிற்கு செல்ல முடியும் என்ற நம்பிக்ககை அவளிடம் இருந்தது.



நஜீ அல் அலிக்கு ஆரம்பக் கல்வியைக் கூட உரிய முறையில் கற்க கிடைக்கவில்லை. அவரது குடும்ப நிலை யும் மோசமாக இருந்தது. எனினும், கல்வியின் மீதான ஆர்வம் குறையவில்லை.1937 ஆம் ஆண்டு பிறந்தவர் நஜி அல் அலி.