Wednesday, July 9, 2008

அறிமுகக் குறிப்பு

தாஹா ஜாபிர் அலவானி கெய்ரோவிலுள்ள அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத் தில் கலாநிதிப் பட்டம் பெற்றுக் கொண்டவர். இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனத்தின் ஸ்தாபக உறுப்பினர்; முன்னாள் தலைவர். சமூக விஞ்ஞானங்கள் மற்றும் இஸ்லாமிய பாடசாலைக்கான மையம், வட அமெரிக்காவின் பிக்ஹு சபை என்பவற்றின் தலைவர். இவர் அறபு மொழியில் எழுதிய ‘அதபுல் இஹ்திலாப்பில் இஸ்லாம்’ என்ற நூலின் ஆங்கிலப் பதிப்பின் தமிழ் வடிவமே இந்நூலாகும். இதுதவிர்ந்த இன்னும் சில நூற்களும் தமிழில் வெளிவந்துள்ளன.
வெளியீட்டாளர் குறிப்பிலிருந்து...இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் இந்த நூலின் மூல அறபு வாசகத்தை தயார் செய்து வந்த கலாநிதி தாஹா ஜாபிர் அலவானி கவனத்தில் கொண்டிருந்தது. முழு முஸ்லிம் சமூகத்தையுமல்ல. முஸ்லிம் உலகில் சிறியதோர் அங்கமான ஒரு நாடு மட்டுமே அன்னவர் விளிக்க விரும்பியது. அங்கு இஸ்லாமிய இயக்கங்கள் சில திறம்பட இயங்கி வந்தன. அவை அரசியல் அரங்கில் ஈடுபட்டு ஆட்சிபீடம் ஏறிவிடக் கூடுமாயின் தாம் அன்றாடம் எதிர்நோக்க வேண்டியுள்ள பிரச்சினைகள் அனைத்துக்கும் தக்க தீர்வுகள் கண்டுக் கொள்ளலாம் என நேர்மை உள்ளம் கொண்ட சாதாரண முஸ்லிம் மக்கள் எதிர்பார்ப்புகள் வைத்திருந்தார்கள்.
என்றாலும், காலப்போக்கில் நிகழ்ந்ததென்ன? மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்த அந்த இஸ்லாமிய இயக்கங்கள், இராஜாங்கத்தாரின் அழுத்தங் களின் விளைவாக பல்வேறு குழுக்களாகப் பிளவுபட்டுச் சொல்லலாயின. மட்டுமல்ல, அவை ஒன்றையொன்று எதிர்த்துச் செல்லப் பிளவுகள் பெருகி பலதரப்பட்ட இஸ்லாமிய கட்சிகள், சங்கங்கள், இயக்கங்கள், கூட்டுகள் எனச் சிதைவுறலாயின. ஒவ்வொரு குழுவாரும் தத்தமது கருத்தை ஏற்கக் கூடிய மக்களின் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்வதில் மட்டுமே கவனஞ் செலுத்தி வரலானார்கள். இந்தப் பின்னணியிலே கலாநிதி தாஹா ஜாபிர் அலவானி இந்நூலை எழுதியுள்ளார்.
என்குறிப்பு
முஸ்லிம் சமூகத்திற்குள்ளால் பல பிரிவுகள் காணப்படுகின்றன. அவர்களுக் குள்ளால் காணப்படுகின்ற முரண்பாடுகளின் விளைவாக பரவலாக மோதிக் கொள்கின்றார்கள். உயிரிழப்புக்களை, சொத்திழப்புக்களை ஏற்படுத்திக் கொள்கி ன்றார்கள் என்ற செய்திகளை இன்றைய நாட்களில் அதிகமாக செவிமடு க்கின்றோம். அவை முற்றுமுழுதாக உண்மையல்லாத போதும் அவற்றில் காணப்படும் யதார்த்தங்களை புறந்தள்ளி நாம் பிளவுப்படாத சமூகம் என்று கூற முடியாதுள்ளது.முரண்பாடுகள் தோன்றுவது இயல்பானது. அந்த இயல் பிலே மனிதன் படைக்கப்பட்டுள்ளான். ரஸூல் (ஸல்) அவர்களின் காலத்திலும் ஸஹாபாக்களிடையே ஏற்பட்ட முரண்பாடுகளை வரலாற்றிலே நாம் காண்கின்றோம். ஆனால் அந்த முரண்பாடுகள் அவர்களது உறவை, சகோதரத்துவத்தைப் பாதிக்கவில்லை. மாற்றமாக இன்னும் நெருக்கமான வர்களாக அவர்கள் மாறினார்கள்.அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) ஆகியோரு க்கிடையே நிறைய விடயங்களில் கருத்து முரண்பாடுகள் காணப்பட்டன. ரஸூல் (ஸல்) அவர்களின் முன்னிலையிலே அவர்கள் சத்தமிட்டு, முரண் பட்டுக் கொண்டபோது அல்குர்ஆன் வசனமும் இறங்கியது. ஆனால் அபூபக்கர் (ரழி) அவர்கள் தனது மரணத் தருவாயில் அடுத்த கலீபாவாக உமர் (ரழி) அவர்களையே தெரிவு செய்துவிட்டுச் சென்றார்கள்.இந்நிலை ஸஹாபா க்களின் இறுதிக் காலப்பிரிவில் மாற்றம் பெறலாயிற்று. சட்டப்பிரச்சினை களில் காணப்பட்ட முரண்பாடுகளோடு அரசியல் முரண்பாடு களும் தீவிர மடைந்தன. குறிப்பாக அலி (ரழி), முஆவியா (ரழி) ஆகியோருக்கிடையிலான முரண்பாடு முஸ்லிம் சமூகத்தை பல கூறுகளாக பிளவடையச் செய் தது.அதன் பின்னரான காலப்பகுதிகளில் மத்ஹப்களை பின்பற்றும் நிலை வளர்ந்து, அரசியல் வேறாகவும், மார்க்கம் வேறாகவும் கருதப்பட்டது. இம்முரண்பாடுகளை கவனமாக கையாண்ட வெளிச்சக்திகள் கிலாபத்தை வீழ்ச்சியடையச் செய்தன.இன்று அநேகமான முஸ்லிம்களிடத்திலே இஸ்லா த்தின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையீனம் காணப்படுகின்றது.
சிலர் இஸ்லாத்திலே முரண்பாடுகளே தோன்றக்கூடாது என்று எதிர்பார்க் கின்றனர். பலர் இது குறித்து எவ்வித கவனமு மின்றி வாழ்ந்துக் கொண்டிருக் கிறார்கள்.இந்நூல் முரண்பாடுகள் இயல்பானது என்பதையும், அதன் போது பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்களையும் உதாரணங்களோடு சொல்லிச் செல்கின்றது. அவசியம் வாசித்து விளங்கிக் கொள்ள வேண்டிய நூலாகும்.

No comments: