Sunday, June 29, 2008

நஜீ அல் அலியை நினைத்து…




நஜீ அல் அலி ஒரு பிரபல்யமான கார்டூன் ஓவி யர்.1987.07.22 ஆம் திகதி புதன்கிழமை இவர் லண்டன், செல்சியிலிருந்து அல் கப்பாஸ் பத்திரிகை அலுவலக த்திற்கு சென்று கொண்டிருந்த போது துப்பாக்கி மனித னால் தலையில் சுடப்பட்டார். ஸ்டீபன் மற்றும் ஸெயாரிங் வைத்தியசாலைகளில் 5 வாரங்களாக கோமா நிலையிலி ருந்தார். அந்த 5 வாரங்களும் அவரை இயந்திரங்களே இயங்கச் செய்திருந்தன. ஆகஸ்ட் 30ஆம் திகதி 1987 இல் நள்ளிரவு கடந்து ஒரு மணித்தியாலயத்தில் தனது 51 ஆவது வயதில் மரணித்தார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.



1988 ஆம் ஆண்டு சர்வதேச பத்திரிகை வெளியீட்டார்களின் சங்கம் வருடாந்த தங்கப்பேனை விருதை வழங்கி அவரை வைத்தது.



நஜீ அல் அலிக்கு கார்டூன் வரையத் தொடங்கியதிலிருந்தே கொலை அச்சுறுத்தல்கள் காணப்பட்டன. அதனால் பல நாடுகளுக்கு இடப்பெயரவும் நிர்பந்திக்கப்பட்டார். லெப னான்,குவைத்,பிரித்தானியா என்பவை குறிப்பிடத்தக்கவை.
அவருக்கு 11வயதாக இருந்தபோது 1948 ஆம் ஆண்டு பலஸ்தீனை இஸ்ரேல் என்ற ய10த சக்தி ஆக்கிரமித்தது. எனவே நிறைய பலஸ்தீனர்களைப்போல நஜீயின் குடும்பமும் தென்லெபனானிலுள்ள சிடன் பிரதேச த்திலுள்ள அகதி முகாமில் தஞ்சமடைந்தது. முகாமி லிருந்த காலப்பிரிவிலே ஐ.நா வின் அகதிகள் நலன் பேணும் மையத்தின் ஆசிரியர்களால் இவரது திறமை அறியப்பட்டது. அவர்கள் கார்டூன் வரையும் துறை யில் நஜீயை ஊக்குவித்தனர்.



பின்னர் நஜீ சித்திரப்பாட ஆசிரியராக குவைத்திற்கு சென் றார். அங்கிருந்தபோது அல்கப்பாஸ் பத்திரிகை அலுவலக த்தில் கார்டூன்களை வரைந்தார். அவரது கார்டூன்கள் பல ரதும் கவனத்தைப் பெற்றன. இந்ந நிலையிலே அவர் அரசியல் காரணங்களுக்காக குவைத்திலிருந்து வெளியே ற்றப்பட்டார்.



நஜீயின் தாயின் நிலை துயர் நிறைந்தது. அவள் பலஸ்தீனி லுள்ள தனது வீட்டுச்சாவியை அவளது காலத்திலே தொங்கப்போட்டிருந்தாள்.என்றாவது ஒரு நாள் தனது நாட்டிற்கு ,தனது வீட்டிற்கு செல்ல முடியும் என்ற நம்பிக்ககை அவளிடம் இருந்தது.



நஜீ அல் அலிக்கு ஆரம்பக் கல்வியைக் கூட உரிய முறையில் கற்க கிடைக்கவில்லை. அவரது குடும்ப நிலை யும் மோசமாக இருந்தது. எனினும், கல்வியின் மீதான ஆர்வம் குறையவில்லை.1937 ஆம் ஆண்டு பிறந்தவர் நஜி அல் அலி.

No comments: